டனோ சலோவ் அவர்களுடன் கலைஞர்

பல்கேரியக் குடியரசின் அமைச்சர் குழுத் துணைத் தலைவர் டனோ சலோவ் அவர்களை மாலை அணிவித்து வரவேற்கிறார் பொதுப்பணித் துறை அமைச்சர் கலைஞர். (ஏப்ரல் 27, 1967)

ராபர்ட் எஸ் மெக்நமராவுடன் கலைஞர்

பன்னாட்டு வங்கியின் தலைவர் ராபர்ட் எஸ். மெக்நமராவுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் அண்ணா, அருகில் கலைஞர். (நவம்பர் 22, 1968)

போப் ஆண்டவருடன் கலைஞர்

வெளிநாட்டுப் பயணத்தின் போது, போப் ஆண்டவருடன் கலைஞர். (ஜூலை 4, 1970)

லீ க்வான் யூ அவர்களுடன் கலைஞர்

சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்து உரையாடுகிறார் கலைஞர். (ஆகஸ்டு 30, 1970)

டேனியல் பாட்ரிக் மொய்னிஹானுடன் கலைஞர்

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேனியல் பாட்ரிக் மொய்னிஹானுடன் கலைஞர்.

நேபாள மன்னருடன் கலைஞர்

நேபாள மன்னருக்கு நேசத்துடன் மாலை அணிவிக்கிறார் கலைஞர். (அக்டோபர் 10, 1973)

இலங்கை அமைச்சர் தொண்டமானுடன் கலைஞர்

இலங்கை அமைச்சர் தொண்டமானுடன் இலங்கை நிலவரம் குறித்து கேட்டறிகிறார் கலைஞர். (மார்ச் 25, 1989)

டத்தோ எஸ் சாமிவேலுவுடன் கலைஞர்

மலேசிய நாட்டின் பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ எஸ். சாமிவேலுவுடன் கலைஞர்.

தலாய் லாமாவுடன் கலைஞர்

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுடன் கலைஞர். (டிசம்பர் 13, 1990)

இராணி எலிசபெத்துடன் கலைஞர்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தைக் கௌரவித்துச் சிறப்பு விருந்தளித்து மகிழ்கிறார் கலைஞர். அருகில் ஆளுநர் ஃபாத்திமா பீவி. (அக்டோபர் 16, 1997)