இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி உள்ளிட்டோர் நடித்து 1956 பிப்ரவரி 25 அன்று வெளியான ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் கதை வசன நூல் இது. இத்திரைப்படத்தில் சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் ஆகியோர் குறித்த நாடகக் காட்சியைக் கலைஞர் அருந்தமிழ் வசனங்களால் அழகுமிகு ஓவியமாகத் தீட்டியுள்ளார்.