முத்தமிழறிஞர் கலைஞரின் ஐம்பதாண்டு கால சட்டமன்றப் பணிகளின் நிறைவையொட்டி 2007-ல் வெளியான நூல்வரிசை இது. சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான விவாதங்களில் அவர் கலந்துகொண்டு ஆற்றிய உரைகளின் முதல் பகுதி இது.