பாண்டியனுடன் பூம்புகார் வந்த செழியன், சோழ நாட்டில் நிலவிவந்த அரசியல் புயலிலிருந்து பாண்டியனையும் சோழனையும் காப்பாற்றி, பாண்டியனின் தூதுவனாக ரோமாபுரி சென்று, அங்கு அகஸ்டஸ்சீசரைக் காப்பாற்றி, ரோமாபுரிப் பாண்டியனாகத் திரும்பியதைச் சொல்லும் வரலாற்றுப் புதினம். அத்துடன் கடந்த கால வரலாற்றுச் செய்திகளுக்கு இரத்தமும் சதையும் கொடுத்து நிகழ்கால அரசியல் பிரச்சினைகளோடும் வாழ்க்கை முறைகளோடும் பிணைக்கிறது. கடந்த காலத்தையும் வரும் காலத்தையும் இணைக்கும் இணைப்பாக நிகழ் காலத்தை அமைத்துப் படைக்கப்பட்ட வரலாற்றுப் புதினம் எனவும் குறிப்பிடலாம்.