கிராமியக் கலைகளாம் கரகாட்டம், தீச்சட்டி எடுத்தல், மயிலாட்டம் இவற்றின் மூலம் மக்களின் கலை உணர்வை மூடநம்பிக்கைக்குப் பயன்படுத்தும் எத்தர்களின் சுயநலத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது இப்புதினம். எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அறியாமை, மூடநம்பிக்கை நீங்கிய பூஞ்சோலை, பொன்மணி ஆகியோரையும், எப்படி வாழக் கூடாது என்பதற்குக் கற்பூரம், மைனா ஆகியோரையும் படைத்துக்காட்டியிருக்கிறார் கலைஞர்.