புதைந்து கிடக்கும் பொற்குவியலைத் தேடி அலையும் சுயநலவாதிகள் அதற்காகப் பின்பற்றும் மூடநம்பிக்கைகளையும் செய்யும் கொலைகளையும் சொல்கிறது. இவர்களுக்கிடையில் அகப்பட்டு அல்லலுறும் இளங்காதலர்களான துரை, பரிமளா இருவரும் படும் பாட்டை எடுத்து விளக்குகிறது. மூடநம்பிக்கைக்கு எதிராக முரசு கொட்டும் வகையில் எழுதப்பட்ட புதினம் இது.