இறைவனின் 108 தாண்டவ நிலைகளைப் பெரிய கோயிலின் மேல்தளத்தில் உட்பாகத்து அடிவரிசையில் சிற்பங்களாகச் செதுக்க ஏற்பாடு செய்தான் இராசராசன். வேலையும் நடந்தது. 81 சிற்பங்களைச் செய்து முடித்து 82-ஆவது சிற்பத்தை ஆரம்பித்து எக்காரணத்தாலோ முடிக்காமல் விடப்பட்டிருக்கிறது என்னும் வரலாற்றுத் தகவலை அடிப்படையாகக் கொண்டு கலைஞர் எழுதிய குறும்புதினம் இது.