மேரி காரல்லி எழுதிய புதினத்தின் அரசன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நவீனக் காலத்தை நோக்கிப் பயணிக்கிற ஒரு காலகட்டத்தில் கதை நடப்பதாக எழுதப்பட்ட நாடகம். மதம், ஆட்சிபீடம், பிரச்சார பீடம் இம்மூன்றுக்கும் மக்களுக்கும் இடையில் நடைபெறும் போராட்டமே இந்நாடகம். மதகுருவாக இருக்கிற ஒருவர் எப்படியெல்லாம் அரசனை ஆட்டிப்படைகிறார் என்பதை எடுத்துச்சொல்லும் இந்நாடகம், 1962 மதுரையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் நிகழ்த்தப்பட்டது.