சமூகச் சீர்திருத்தக் கருத்தும் கதைப் பிடிப்பும் கொண்ட பராசக்தி திரைப்படத்திற்குத் தினமணி நாளிதழ் எழுதிய விமர்சனத்திற்குப் பதிலடியாக கலைஞர் எழுதிய உருவக நாடகம் இது. திராவிட இயக்கக் கொள்கை விளக்கமாகவும் இந்நாடகம் அமைந்துள்ளது.