எழுச்சிமிக்க வசனங்களால், தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய கிளர்ச்சியை உருவாக்கிய நாடகம் இது. பலமுறை அரசால் தடைசெய்யப்பட்டும் வெவ்வேறு பெயர்களில் துணிந்து நடத்தப்பட்டது. இந்நாடகம் குறித்துக் கலைஞர் அவர்களின் வார்த்தைகளில் குறிப்பிடுவதானால்... ‘பொழுது விடியும் - புறப்படுவான் கதிரவன் கிழக்கு திசையில்! அவன் புறப்பட்டால்தான் பொழுதே விடியும், அந்த நெடிய பயணம் நிற்கவே நிற்காது! அந்தப் பயணத்தில் குறுக்கிடும் கோணல்மதி கொண்டோர் சிலரையும் அவர்களை எதிர்த்திடும் கொள்கைச் சீயங்கள் சிலரையும் நாட்டுக்குக் காட்டுவதே இந்தத் தூக்குமேடை.'