லாயத்திலே தள்ளி அடைக்கப்படும் குதிரைக்குக்கூடச் சிறிது கனைத்திட உத்தரவு உண்டு. அதுகூட இல்லையே இந்த நாட்டுப் பெண்களுக்குச் சொல்லும் நாடகம் இது. சமுதாயத்தின் அறியாமையைப் போக்கும் வகையில் 1943-இல் கலைஞர் எழுதி, நடித்த முதல் நாடகம். சொற்சுவையும் கருத்துச் சுவையும் பூத்துக் குலுங்கும் இந்நாடகம் சாந்தா (அ) பழனியப்பன் என்ற பெயரிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. காதல், பெண்ணடிமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மதுவின் அவலம், மூடநம்பிக்கை, கடவுள் மறுப்பு, விதவை மறுமணம் ஆகியன குறித்துப் பேசும் இந்நாடகம் 18 காட்சிகளைக் கொண்டது.