tva-logo

தொண்டூர் குடைவரை

    அமைவிடம் - தொண்டூர்
    ஊர் - தொண்டூர்
    வட்டம் - வல்லம்
    மாவட்டம் - காஞ்சிபுரம்
    வகை - குடைவரை
    தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் - கி.பி.8-ஆம் நூற்றாண்டு
    அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் - மலையனூர் அங்காளம்மன் கோயில், தொண்டூர் சங்ககாலக் கல்வெட்டு, செஞ்சிக் கோட்டை, மேல் ஒலக்கூர் தவ்வை
    பாதுகாக்கும் நிறுவனம் - மத்தியத் தொல்லியல் துறை
    விளக்கம் -

             தொண்டூர் விண்ணம்பாறை என்னும் கல்வெட்டுப் பாறை 1300 ஆண்டுகள் பழமையான பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கிபி 846 - 869) காலத்தியது. தொண்டூர் கிராமத்தில் காணப்படும் வலமிருந்து இடமாக இருக்கும் சயனக்கோலம்  காஞ்சிபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் மட்டுமே உள்ளது. சற்றே முற்றுப்பெறாது பல்லவர்களின் தொடக்ககால சிற்பம் போன்று, தோரயமாக 20 அடி நீளமும், 10 உயரமுமாக உள்ளார் விஷ்ணு.

             இச்சிலைக்கு அருகில் #பல்லவர்கள் கால கல்வெட்டுகளும், சற்றுதொலைவில் இருக்கும் மலையில் தமிழ்பிராமி கல்வெட்டுகளும் காணக் கிடைக்கின்றன.

    ஒளிப்படம் எடுத்தவர் - க.த.காந்திராஜன்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
    சுருக்கம் -

              தொண்டூர்  செஞ்சி அருகில் காணப்படும் சிற்றூர். இங்கு காணப்படும் விண்ணம் பாறையில் பல்லவர் கால கிடந்தநிலையில் திருமாலவன்  சிலாவுருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பிற்கால பல்லவர்களின் கலைப்பாணியாக அமைகிறது. கம்போடியாவில் காணப்படும் விஷ்ணுவின் தலைக்கோலம் இதனுடன் ஒப்பிடத்தக்கது.