tva-logo

தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை
உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னுருவாக்கத் திட்டத்தின் கீழ் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழக வரலாறு ஆகியனவற்றோடு தொடர்புடைய அரிய அச்சு நூல்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள், தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த பிரிவுகளான தொல்பழங்காலம், அகழாய்வுகள், கல்வெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், சிற்பங்கள், நாணயங்கள், செப்பேடுகள், தொல்லியல் சின்னங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் ஆய்வுத் தரவுகள் சேகரிக்கப்பட்டும், தொகுக்கப்பட்டும், மின்னுருவாக்கம் செய்யப்பட்டு மீத்தரவுகளாக ஆவணப்படுத்தப்பட்டு https://www.tamildigitallibrary.in/ மற்றும் http://www.tagavalaatruppadai.in என்னும் இணையதளங்களில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்பதற்கு ஏதுவாக தாங்கள் சேகரிக்கும் மேற்கண்ட ஆய்வாதாரங்கள் பற்றிய தரவுகளை தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு வழங்க வேண்டப்படுகிறது. தங்கள் தரவுகளை இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் அளிக்கலாம். அங்ஙனம் அளிக்கப்படும் தரவுகளும், ஒளிப்படங்களும் த.இ.க. தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு வளமையர்களால் சான்றாதாரங்களோடு சரிபார்க்கப்பட்ட பின்பு, வழங்கியவர் பெயர்களுடன் மேற்கண்ட இணையதளங்களில் படைப்பாக்க பொதும உரிமத்தின் (Creative Commons) அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அரிய நூல்கள்

பருவ இதழ்கள்

ஓலைச்சுவடிகள்

ஒலி-ஒளி ஆவணங்கள்

வரலாற்றுச் சின்னங்கள்

தொல்லியல் இடங்கள்

கல்வெட்டுகள்

கோயில்கள்

சிற்பங்கள்

ஓவியங்கள்


தமிழ் இணையக் கல்விக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக வளாகம்,
காந்தி மண்டபம் சாலை,
கோட்டூர், சென்னை – 600 025.
தொலைபேசி: +91-44-22209400
மின்னஞ்சல் : tva@tn.gov.in

www.tamilvu.org

www.tagavalaatruppadai.in

www.tamildigitallibrary.in