tva-logo

நூலகத்தைப் பற்றி

அறிவைப் பொதுமை செய்வோம்

பாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளோம். இந்தத் தமிழ் வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது; கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது. இத்தளத்தில் உள்ள ஆய்வாதாரங்களின் மொத்த எண்ணிக்கை பின்வருமாறு:

மேலும் வாசிக்க

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம் : பொருட்பால்
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். - திருவள்ளுவர்

'இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.'