சிறு தொடரோவியமாய், குறுங்காதல் காவியமாய் அமைந்த கலைஞரின் கவிதைக் காவியம். கலைஞரின் பவளவிழா வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல், வாழை மரங்களை வைரம் பாய்ந்த தேக்குகளாக்கிக் கோழைகளுக்கு காதல் முதுகெலும்பு வழங்கும் வல்லமை கொண்ட 17 கவிதைகளின் தொகுப்பு. பண்டைத் தமிழர் போற்றிய காதல், வீரம் என்னும் உணர்வுகளையும் கொண்டது.