தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா (1918 – 2018)
ஆவணத் தொகுப்பு

மக்கள் திலகம், புரட்சி தலைவர் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதல்வராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அ.தி.மு.க. என்னும் அரசியல் இயக்கத்தை நிறுவியவர். தமிழ் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்துப் புகழடைந்தவர். இயல்பாகவே வள்ளல்தன்மை வாய்ந்தவர். ஏழைக் குழந்தைகள் கல்விகற்க இவரால் தொடங்கப்பட்ட சத்துணவு திட்டம் தமிழகத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது. இவர் எழுதியன குறைவு என்றாலும், இவரின் அரசியல், கலை சார்ந்த கொள்கைகளை அடியொற்றி எழுதப்பட்டவை எண்ணற்றவை.

எம்.ஜி.ஆர் தொடர்பான எழுத்தாக்கங்களைக் காண இங்கே சொடுக்குக.

கருத்து தெரிவிக்க