tva-logo

நூலகத்தைப் பற்றி

அறிவைப் பொதுமை செய்வோம்

பாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளோம். இந்தத் தமிழ் வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது; கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது. இத்தளத்தில் உள்ள ஆய்வாதாரங்களின் மொத்த எண்ணிக்கை பின்வருமாறு:

மேலும் வாசிக்க

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம் : அறத்துப்பால்
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். - திருவள்ளுவர்

'தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.'