tva-logo

நூலகத்தைப் பற்றி

அறிவைப் பொதுமை செய்வோம்

பாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளோம். இந்தத் தமிழ் வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது; கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது. இத்தளத்தில் உள்ள ஆய்வாதாரங்களின் மொத்த எண்ணிக்கை பின்வருமாறு:

மேலும் வாசிக்க

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம் : பொருட்பால்
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. - திருவள்ளுவர்

'சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.'