tva-logo

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
ஆவணத் தொகுப்பு

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (1869 - 1948) என்னும் இயற்பெயரைக் கொண்ட மகாத்மா காந்தி இந்தியத் திருநாட்டின் தந்தை ஆவார். இந்திய நாட்டு விடுதலைக்காக இவர் நடத்திய அறவழிப் போராட்டம் உலகச் சிந்தனையாளர் பலரின் கருத்தைக் கவர்ந்தது.

தென்னாப்பிரிகாவில் வெள்ளைநிறவெறியை எதிர்த்து காந்தி நடத்திய போராட்டங்களுக்கு தமிழர்கள் பலர் துணை நின்றனர். அதுமுதல் தமிழர்களோடு அவருக்கு இருந்த தொடர்பு இறுதிக்காலம்வரை தொடர்ந்தது. திருக்குறள் இவருக்கு விருப்பமான நூல் என்பதோடு, தமிழ்மொழியையும் அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், உப்புச் சத்தியாகிரகம், தொழுநோய் ஒழிப்பு, கதர் இயக்கம், மதுவிலக்கு, தலித் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கங்களின் தொடக்கப்புள்ளி இவராவார். வாய்மை இவரின் வலிமையான போர்க்கருவி. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச்சிந்தனை மரபைக் காந்தியமும் கணிசமாகப் பாதித்தது என்பது பேருண்மையாகும்.

சமூகத்தை முன்னெடுத்த “காந்தியச் சிந்தனை” தொடர்பான அறிவுக் களஞ்சியங்களைக் காண கீழே சொடுக்குக.

1. நூல்கள்

2. இதழ்கள்