tva-logo

“கவிதார்க்கிக சிம்மம்”, “சர்வ தந்திர சுதந்திரர்”, “வேதாந்ததாசரர்”
தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகன்
750 வது ஆண்டு விழா - ஆவணத் தொகுப்பு

ஸ்ரீ வேதாந்த தேசிகன் வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர். கி.பி. 1268ஆம் ஆண்டு பிறந்தவர்.

இராமனுசரின் தத்துவமான விசிட்டாத்துவைதத்தைப் பரப்புவதையே தன் வாழ்நாள் பணியாக கருதியவர். இவர் 124 தமிழ், வடமொழி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் அருளியுள்ளார்.

தமிழில் - அடைக்கலப்பத்து, மும்மணிக்கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆகார நியமம், அம்ருதரஞ்சனி, அம்ருதஸ்வாதினி, அர்த்த பஞ்சகம், சரமஸ்லோக சுருக்கு, த்வய சுருக்கு, கீதார்த்த சங்கிரகம், பரமபத சோபனம், பிரபந்த சாரம், ஸ்ரீவைஷ்ணவதினசரி, திருச்சின்னமாலை, திருமந்திர சுருக்கு, உபகார் சங்கிரகம், விரோத பரிகாரம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ் மேலுள்ள தீராக்காதலினால் தன்னை சந்தமிகு தமிழ்மறையோன் என அழைத்துக்கொண்டார்.

திருப்பாணாழ்வார் பாடிய 'அமலனாதி பிரான்' என்னும் பதிகத்துக்கு பெரியவாச்சான் பிள்ளை ஆணைப்படி இவர் அமலனாதிபிரான் வியாக்கியானம் என்னும் விரிவுரை நூல் செய்துள்ளார்.

வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர். உபய வேதாந்தம் என்னும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர். நாலாயிரமும் பரம வைதிகமே என்பது இவர் கொள்கை.

ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் தொடர்பான நூல்களைக் காண இங்கே சொடுக்குக.